€250 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்டம்!!

29 பங்குனி 2025 சனி 14:00 | பார்வைகள் : 3087
EuroMillions வரலாற்றில் மிகப்பெரிய தொகை வெல்லப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இடம்பெறும் அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் இதுவரை வெல்லப்படாத தொகை முதன்முறையாக வெல்லப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் முதல் 100 மில்லியனர்களின் பட்டியலில் ஒருவர் ஒரே இரவில் இடம்பிடித்துள்ளார்.
மார்ச் 28, நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐரோப்பிய ரீதியிலான EuroMillions சீட்டிழுப்பில், ஒஸ்ரியாவைச் சேர்ந்த ஒருவர் €250 மில்லியன் யூரோகள் வென்றுள்ளார். முதலில் €243 மில்லியன் யூரோக்கள் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி நிமிடத்தில் அது அதிகரிக்கப்பட்டு €250 மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டது.
வெற்றி இலக்கங்களாக 10, 21, 30, 42 மற்றும் 45 ஆகிய ஐந்து இலக்கங்களும், நட்சத்திர இலக்கங்களாக 1 மற்றும் 9 ஆகிய இரு இலக்கங்களையும் தெரிவு செய்த ஒருவருக்கே இந்த தொகை கிடைத்துள்ளது. அவர் ஒஸ்ரியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தவாரம், €17 மில்லியன் யூரோக்களுடன் மீண்டும் அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு போட்டிக்கு வருகிறது.