இன்று பிரான்சில் சூரியகிரகணம்!!

29 பங்குனி 2025 சனி 13:05 | பார்வைகள் : 5167
இன்று மார்ச் 29, சனிக்கிழமை பிரான்சில் சூரியகிரகணம் தென்படு என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் பயணித்து, சூரியனை மறைப்பதே சூரியகிரகணம் ஆகும். இன்று மார்ச் 29, சனிக்கிழமை பிரான்சில் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் மாத்திரமே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது. சூரியனில் 31.4% சதவீதத்தினை சந்திரன் மறைக்கும் எனவும், தலைநகர் பரிடில் 23% சதவீதத்தினை சந்திரன் மறைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு கருவிகள் இல்லாமல் வெற்றுக்கண்களால அதனை பார்வையிடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய தரக்கட்டுப்பாட்டுக்கு அமைவான கண்ணாடிகளை அணிந்துகொண்டு பார்வையிடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.