அவதானம் : Aulnay-sous-Bois நகரை கண்காணிக்கும் ட்ரோன்கள்!!

29 பங்குனி 2025 சனி 16:00 | பார்வைகள் : 8264
Aulnay-sous-Bois நகரை காவல்துறையினரின் ட்ரோன்கள் கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்செயல்கள் மலிந்த நகரமாக மாறிவரும் cité des «3.000» பகுதி (Aulnay-sous-Bois) நகரைக் கண்காணிக்கவே இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மார்ச் 27 வியாழக்கிழமை முதல் மார்ச் 31 - திங்கட்கிழமை வரை இந்த சிறப்பு கண்காணிப்பு இடம்பெறும் எனவும், காவல்துறையினருக்கு இந்த சிறப்பு அனுமதியை நீதிமன்று
வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மீதும் பொதுச்சொத்து மீதும் இடம்பெறும் வன்முறைகளைக் கண்காணிக்க ட்ரோன்கள் மூலமாக காவல்துறையினர் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் cité des «3.000» பகுதியில் பலத்த வன்முறை பதிவாகியிருந்தது. மூன்று காவல்துறையினரை 30 பேர் கொண்டு குழு தாக்கியதில் அவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.