Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் கடுமையாக உயர்ந்த வேலையின்மை

ஜேர்மனியில் கடுமையாக  உயர்ந்த வேலையின்மை

29 பங்குனி 2025 சனி 13:52 | பார்வைகள் : 624


ஜேர்மனியில் மார்ச் மாதத்தில் வேலையின்மை கடுமையாக உயர்ந்ததால், யேர்மனியின் தொழிலாளர் சந்தை மன அழுத்தத்தின் புதிய அறிகுறிகளைக் காட்டியது.

இது அக்டோபர் 2024 க்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும். வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை 26,000 அதிகரித்து.

மொத்தம் 2.92 மில்லியனாக உயர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை(28) தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஆய்வாளர்களின் 10,000 அதிகரிப்பு பற்றிய கணிப்புகளை இரட்டிப்பாக்கியுள்ளது. பருவகாலமாக சரிசெய்யப்பட்ட வேலையின்மை விகிதம் 6.3% ஆக உயர்ந்தது.

இது முன்னைய மாதத்தில் 6.2% ஆக இருந்தது. இது சந்தை கணிப்புகளை விட சற்று அதிகமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்