Paristamil Navigation Paristamil advert login

மியன்மாரில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள் மீட்பு

மியன்மாரில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள்  மீட்பு

29 பங்குனி 2025 சனி 14:04 | பார்வைகள் : 2849


மியன்மாரின் மண்டலாயில் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டவர்கள் தங்களை காப்பாற்றுமாறு இன்னமும் மன்றாடிக்கொண்டிருக்கின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

உயர்மாடிக்கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளிற்குள் சிக்குண்ட ஏழு பேரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்த கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து 50 பேரை மீட்டதாக ஒருவர் தெரிவித்தார்.

மியன்மாரை பூகம்பம் உலுக்கி 24 மணித்தியாலங்களிற்கு மேலாகின்றது.

நாங்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள ஏனையவர்களை காப்பாற்ற முயல்கின்றோம்,

ஆனால் அதற்கு பாரிய இயந்திரங்கள் தேவை,அவர்கள் இன்னமும் அலறுகின்றனர் அவர்களின் குரல்களை கேட்க முடிகின்றது ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை,என மீட்பு பணியாளர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும் இயந்திரங்கள் இருந்தால் இடிபாடுகளை அகற்றி அவர்களை காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்