Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் மீண்டும் நிலநடுக்கம்!!

பிரான்சில் மீண்டும் நிலநடுக்கம்!!

30 பங்குனி 2025 ஞாயிறு 06:37 | பார்வைகள் : 3228


மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனா நிலையில், கடந்த இரு வாரங்களில் இரண்டாவது தடவையாக பிரான்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தென்கிழக்கு பகுதியான Vars மற்றும் Barcelonnette நகரங்களுக்கிடையே நிலநடுக்கம்
நேற்று மார்ச் 29, சனிக்கிழமை நண்பகல் ஏற்பட்டது. 3.5 ரிக்டர் எனும் சிறிய அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Var, Alpes-Maritimes மற்றும் Hautes-Alpes
மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இருந்தபோதும் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

முன்னதாக, கடந்த மார்ச் 18 ஆம் திகதி, Nice நகரில் பத்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன. 4.1 ரிக்டர் அளவு அது பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்