Paristamil Navigation Paristamil advert login

யாழில் மயங்கி விழுந்த குடும்பப் பெண் மரணம்

யாழில் மயங்கி விழுந்த குடும்பப் பெண் மரணம்

30 பங்குனி 2025 ஞாயிறு 06:52 | பார்வைகள் : 501


யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். 

இதன்போது புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த 68 வயதுடையவரே  உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் நேற்றையதினம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இந்நிலையில், அவர் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போது நான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்