ஈத் முபாரக் திகதியை அறிவித்த பெரியபள்ளிவாசல்!!

30 பங்குனி 2025 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 5666
இஸ்லாமியர்களின் புனித நோன்புக் காலம் இன்று மார்ச் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக பரிஸ் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
மார்ச் 1 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பித்த நோன்பு பெருநாள், இன்றுடன் முடிவுக்கு வருவதாகவும், ஈத் முபாரஜ் நாள் நாளை மார்ச் 31 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி, இஸ்லாமிய ஆண்டு முடிவுக்கு வருவதைக் கொண்டாடும் இந்த ஈத் முபாரக் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் முன்பாகவே ஏற்படுகிறது. அந்த வகையில் 2030 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் இரண்டு தடவைகள் நோன்புப் பெருநாள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.