'ஜவான்' பாணியில் அட்லியின் அடுத்த படம்..

30 பங்குனி 2025 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 1919
அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான நிலையில், ‘ஜவான்’ வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட போதிலும், அவருடைய அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி, அட்லியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த படம் அவர் ஏற்கனவே இயக்கிய ’மெர்சல்’ ‘பிகில்’ ‘ஜவான்’ போன்ற திரைப்படங்களின் பாணியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக கசிந்து வரும் நிலையில், தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ஏற்கனவே இயக்கிய ’மெர்சல்’ ‘பிகில்’ ‘ஜவான்’ போலவே, இந்த படத்திலும் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் இரண்டு வேடங்களில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
மிகவும் பிரமாண்டமாக உருவாகும் அதிரடி ஆக்ஷன் படமாக அட்லி-அல்லு அர்ஜுன் கூட்டணி படம் இருக்கும் என்றும், இந்த படத்தின் புரமோ படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்றும் தெரிகிறது.
மேலும், வரும் ஏப்ரல் 8ஆம் தேதி, அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது