இஸ்ரேல் பிரதமரை தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!
.jpg)
30 பங்குனி 2025 ஞாயிறு 18:09 | பார்வைகள் : 1886
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளார்.
உரையாடலின் போது காஸா மீது ஏவுகணைத்தாக்குதல் மேற்கொள்ளுவதை உடனடியாக நிறுத்தும் படி வலியுறுத்தினார். அத்தோடு சிரிய ஜனாதிபதியுடன் உரையாடியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மக்ரோன், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை தேவை எனவும், நியாயமான மற்றும் நீடித்த அமைதி மட்டுமே அனைவரது எதிர்காலத்துக்குமான உத்திரவாதமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், லெபனான் ஜனாதிபதியுடன் உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.