Val-de-Marne : வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்துவிட்டு - €100,000 கொள்ளை!!

31 பங்குனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3094
Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு, அங்குள்ள வீடொன்றுக்கூள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டில் வசித்த ஓய்வுபெற்ற தம்பதிகள் இருவரைக் கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். Quai de l'Artois பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அதிகாலை 2.30 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள், நிதானமாக கொள்ளையிட்டுக்கொண்டு காலை 4.30 மணி அளவிலேயே அங்கிருந்து சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 100,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது. தம்பதியினர் இருவரையும் கட்டிவைத்துவிட்டு கொள்ளையிட்டதாகவும், அவர்கள் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Val-de-Marne நகர குற்றவியல் தடுப்புப்பிரிவினர் (Le service départemental de police judiciaire du Val-de-Marne) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.