பத்தொன்பது மாத சேவைத்தடையின் பின்னர் - இத்தாலிக்கு தொடருந்து!!

31 பங்குனி 2025 திங்கள் 07:26 | பார்வைகள் : 4670
மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டு சேவைத்தடை ஏற்பட்டிருந்த பிரான்ஸ் - இத்தாலி தொடருந்து சேவைகள், இன்று மார்ச் 31, திங்கட்கிழமை மீண்டும் சேவைக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 19 மாதங்கள் கழித்து இந்த சேவை இயக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அன்று பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் இருநகரங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டது. 15,000 கன மீற்றர் அளவுடைய பாறை தொடருந்து தண்டவாளத்தை சேதப்படுத்தியிருந்தது. அதை அடுத்து பரிசில் இருந்து இத்தாலியின் மிலன் நகரை இணைக்கும் தொடருந்து சேவை தடைப்பட்டது.
இந்நிலையில், 19 மாதங்களின் பின்னர் பயணிகள் தொடருந்து, சரக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.