பரிசில் இருந்து வெளியேறிய ஒன்பது இலட்சம் மக்கள்!! - காரணம் என்ன..?
8 மாசி 2017 புதன் 11:30 | பார்வைகள் : 19285
புதிதாக எடுக்கப்பட்ட கணக்கின் படி பரிசுக்குள் 2,241,346 பேர் வசிக்கின்றனர். இன்று பிரெஞ்சு புதினத்தில், பரிசில் இருந்து வெளியேறிய ஒரு பெருந்தொகை மக்கள் குறித்து பார்க்கலாம்!!
பரிசுடன் சேர்ந்து இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் 10.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மொத்த ஐரோப்பாவுக்குள்ளேயும் அதிக மக்கள் வசிக்கும் மாகாணமாக இல்-து-பிரான்ஸ் இருக்கிறது. இருக்கட்டும்... பரிசின் மக்கள் தொகையில் வரலாற்றை பார்த்தால்... 1921 ஆம் ஆண்டு வரலாறு காணாத ஜனத்தொகையை கொண்டிருந்தது பரிஸ்!!
1921 ஆம் ஆண்டுக்கு முன்னரோ... அதன் பின்னரோ எடுக்கப்பட்ட எந்த ஆயுவுகளிலும் பரிசின் மக்கள் தொகை 2.5 மில்லியனுக்கு மேல் தாண்டவில்லை... ஆனால் 1921 ஆம் ஆண்டில் பரிசின் மக்கள் தொகை 2.9 மில்லியனாக இருந்தது!!
பரிஸ் மிக வேகமாக உருவெடுத்த காலப்பகுதி அது!! முதலாம் உலகப்போர் கோர தாண்டவத்தில் பரிசையே நம்பியிருந்த பல இலட்சம் மக்கள் தங்கள் வதிவிடங்களை மாற்ற தொடங்கினார்கள். பரிசை தவிர்த்து.. பிரான்சில் பல நகரங்கள் உருப்பெற தொடங்கின. பொருளாதாரம் விரிவடைந்தது.
மக்கள் தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டது. அதே சமையத்தில் ஏனைய நகரங்களில் சொற்ப அளவே இருந்த ஜனத்தொகை சரிசமமாக விரிவடைய தொடங்கியது. 1954 க்கு பின்னர் பரிசில் 2,147,857 எண்ணையுடைய மக்களே இருந்தனர். குறித்த இந்த 30 வருடங்களில் பரிசில் இருந்து ஒன்பது மில்லியன் வரை மக்கள் தொகை சரிந்தே இருந்தது.
பின்னர் 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனத்தொகையில் குறிப்பிட்ட முன்னேற்றம் கண்டது. 2,234,000 மக்கள் 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், பரிசில் வசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் 7 வருடங்கள் கழித்து, 2016 இலும் ஜனத்தொகையில் பெரிய மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.