130 கி.மீ புயல்.. வெள்ளம்! - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

31 பங்குனி 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 1145
புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக மார்ச் 31, இன்று திங்கட்கிழமை நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்கு மாவட்டங்களில் புயல் வீசும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône, Drôme மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு ’மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழை வெள்ளம் Charente-Maritime, Finistère, Gironde மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பலத்த மழை மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படு அங்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.