இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜே சித்து..!

31 பங்குனி 2025 திங்கள் 11:00 | பார்வைகள் : 1777
வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் இவருடைய லூட்டி வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.
ப்ளாக் ஷீப் யூடியூப் தளத்தில் இருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கியவர் வி.ஜே.சித்து. ப்ளாக் ஷீப் அணியில் இருந்து பலரும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் வி.ஜே.சித்துவும் இணைந்து இருக்கிறார்.
மேலும், பல படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரிக்க முடிவெடுத்து பணிபுரிந்து வருகிறது. அதில் ஒரு படத்தின் மூலம் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகிறார்.
அப்படத்தில் அவரே நாயகனாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் அவரை வைத்து ப்ரோமோ ஷூட் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.