Paristamil Navigation Paristamil advert login

மியன்மார் நிலநடுக்கும் - இடிபாடுகளிற்குள் இருந்து மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு

மியன்மார் நிலநடுக்கும் - இடிபாடுகளிற்குள் இருந்து மற்றுமொரு பெண் உயிருடன் மீட்பு

31 பங்குனி 2025 திங்கள் 12:37 | பார்வைகள் : 1745


மியன்மாரை பூகம்பம் உலுக்கிய 60 மணித்தியாலங்களிற்கு பின்னர் திங்கட்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்பு பணிகளில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களிற்கு இது ஒரு நம்பிக்கை அளிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

இதுவரை பூகம்பத்தினால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 2000 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

உயிரிழப்புகளின் உண்மையான அளவு இதுவரை தெரியவரவில்லை என்ற அச்சமும் நிலவுகின்றது.

திங்கட்கிழமை காலையில் ஐந்து மணிநேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்டலாயின் கிரேட்வோல் ஹோட்டலின் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் ஒருவரை மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டுவந்தவேளை மகிழ்ச்சியான நிலை காணப்பட்டது என மியன்மாருக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மியான்மாருக்கு மீட்பு பணியாளர்களையும் உதவிகளையும் அனுப்பியுள்ள நாடுகளில் சீனாவும் ஒன்று.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்பட்டதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை மண்டலாயின் தொடர்மாடியொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பு பணியாளர்கள் மீட்டபோதும் பின்னர் அவர் உயிரிழந்தார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்