ஒன்டாரியோவில் கடும் பனிமழை

31 பங்குனி 2025 திங்கள் 12:42 | பார்வைகள் : 2077
ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்டாரியோ மாகாண மின்சார அமைப்பான Hydro One தெரிவித்ததன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டுமே 3.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி இருந்தனர்.
சில பகுதிகளில் மக்கள் விரைவில் மின் இணைப்பு பெற முடியாது எனவும் தெரிவித்தனர்.