போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்! அமித் ஷா

31 பங்குனி 2025 திங்கள் 18:32 | பார்வைகள் : 1641
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போதை பொருள் நடமாட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைககள் கடுமையாக எடுக்கப்படும் என்று அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியுடன் கூறி இருந்தார். போதை பொருள் இல்லாத இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில் டில்லியில் ரூ.27.4 கோடி மதிப்புள்ள போதை பொருட்களைக் கைப்பற்றி ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் வேட்டை இடைவிடாமல் தொடரும். டில்லி என்சிஆர் பகுதியில் பெரிய போதை பொருள் நெட்வொர்க் முறியடிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டில்லி போலீசார் இணைந்து 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.27.4 கோடி மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், கொகைய்ன் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை எடுத்த போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டில்லி போலீசுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.