இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் அதிரடி மாற்றம்

31 பங்குனி 2025 திங்கள் 15:24 | பார்வைகள் : 2097
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாயாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லிட்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாயாகும்.
மற்ற விலைகள் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மாற்றமின்றி தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.