Paristamil Navigation Paristamil advert login

தொழுகையின் போது மண்ணில் புதைந்து 700 இஸ்லாமியர்கள் உயிரிழப்பு

தொழுகையின் போது மண்ணில் புதைந்து 700 இஸ்லாமியர்கள் உயிரிழப்பு

31 பங்குனி 2025 திங்கள் 15:58 | பார்வைகள் : 1302


மியான்மர் நிலநடுக்கத்தில் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி மியான்மரில் 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து, இதுவரை இல்லாத சேதத்தை மியான்மர் சந்தித்துள்ளது. இதில், 1700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா சார்பில், ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் உள்பட 52 டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் மியான்மருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த Tun Kyi கூறியதாவது, "இந்த நிலநடுக்கத்தால் 60 மசூதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

இதுவரை நிலநடுக்கத்தில் 1,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் உயிரிழந்தவர்கள் சேர்க்கப்பட்டார்களா என்பது குறித்த தகவல் இல்லை.

இஸ்லாமியர்கள் இன்று தங்களது புனித பண்டிகையான ரம்ஜானை கொண்டாடி வரும் நிலையில், இந்த துயர செய்தி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்