ஊட்டி, கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

1 சித்திரை 2025 செவ்வாய் 08:05 | பார்வைகள் : 350
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ -- பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதில், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐகோர்ட்டின் கடந்த மாத உத்தரவின் படி, இன்று முதல் ஜூன் 30 வரை இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''ஏப்., 1ம் தேதி முதல், ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணியரின் வாகனங்களுக்கு மட்டுமே இ----பாஸ் வழங்கப்பட்டு, அனுமதிக்கப்படும்.
சோதனை சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணியர் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம். மேலும், 'கியூ.ஆர்.,' கோடு முறையிலும் சோதனைச் சாவடிகளில், 'ஸ்கேன்' செய்யலாம்,'' என்றார்.
எண்ணிக்கை கட்டுப்பாடு!
நீலகிரி வார நாட்களில் 6,000 வாகனங்கள் வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள்கொடைக்கானல் வார நாட்களில் 4,000 வாகனங்கள் வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்கள்