வாழ்நாளில் இரண்டு முறை முதுமை வருமா..?

1 சித்திரை 2025 செவ்வாய் 15:29 | பார்வைகள் : 442
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வயதாகும் செயல்முறை தொடர்ச்சியாக நடக்கும் என்று பலர் கருதுகின்றனர், ஆனால் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வாழ்க்கையில் குறிப்பிட்ட இரண்டு கட்டங்களில் மட்டுமே சில பயோலொஜிக்கல் மார்க்கர்ஸ் வியத்தகு முறையில் மாறுவதைக் கண்டறிந்தனர். அதாவது, பிளட் ப்ரோடீன்ஸ் மற்றும் மாலிகுளர் டேட்டாகளை ஆய்வு செய்வதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்கள் 44 மற்றும் 60 வயதில் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த குறிப்பிட்ட வயதுகளில் உடல்நல அபாயங்களும், உடல் செயல்பாடுகளும் திடீர் திருப்பங்களை எடுக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஃபாட்ஸ் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை ப்ராசஸ் செய்யும் விதத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எடை பராமரிப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அறிகுறிகள் இல்லாதவர்களிடமும் கூட இதய நோய் தொடர்பான அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன.
ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படும், இது ஆற்றல், மனநிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்.இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும், ஏனெனில் இந்த மாற்றங்கள் ஆனது நமது ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனும், நோய்களிலிருந்து மீள்வதற்கான திறனும் குறைகிறது.
கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம்: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.இந்த காலக்கட்டத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு படிப்படியாகக் குறைகிறது.அறிவாற்றல் குறைபாடு மற்றும் தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் அதிகமாகத் தெரியும்.இந்த கட்டத்தில், ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
40 வயது அடைவதற்கு முன், இதய ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்கால அபாயங்களைத் தடுக்க உதவுகிறது. 60 வயது அடைவதற்கு முன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தசை வலிமையைப் பாதுகாப்பது மற்றும் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.