மியன்மார் பூகம்பம் - தனது அன்புக்குரியவர்கள் 170 பேரை இழந்த துயரத்தில் சிக்குண்டுள்ள நபர்

2 சித்திரை 2025 புதன் 16:27 | பார்வைகள் : 704
மியன்மார் பூகம்பத்தில் தனது நண்பர்கள் உறவினர்கள் தனது சபையை சேர்ந்தவர்கள் உட்பட 170 பேரை இழந்த முன்னாள் இமாமின் துயரம் குறித்து பிசிசி தெரிவித்துள்ளது.
பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது.
சகைங்கில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பு வெளியான பின்னர் மியன்மாரின் மத்தியில் உள்ள ஐந்து மசூதிகளை நோக்கி ஆயிரக்கணக்கனா முஸ்லீம்கள் விரைந்தனர்.
அவர்கள் ரம்ழானிற்கான இறுதி பிரார்த்தனையில் ஈடுபட ஆர்வமாகயிருந்தனர்,ரம்ழானிற்கு சில நாட்களேயிருந்தது.அது புனித மாதத்தை முடித்துவைக்கும்.
பின்னர் 12.51 அளவில் உக்கிரமான பூகம்பம் தாக்கியது, மூன்று மசூதிகள் தரைமட்டமாகின,அதில் மியன்மாரின் மிகப்பெரிய மசூதியும் ஒன்று அதற்குள் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
பல கிலோமீற்றர் தொலைவில் ,தாய்லாந்தின் எல்லை நகரமான மேசொட்டில் மயோமா மசூதியின் முன்னாள் இமாம் இந்த பூகம்பத்தின் அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் , இவர் பூகம்பம் தனது உறவினர்கள் , நண்பர்கள்,அவரது முன்னாள் சபையை சேர்ந்தவர்கள் 170 பேரை பலியெடுத்துள்ளதை அறிந்தார்.
இவர்கள் அனேகமாக மசூதியிலேயே உயிரிழந்தனர்.இவர்களில் சிலர் மியன்மாரின் மிகவும் நெருக்கமான முஸ்லீம் சமூகத்தின் முக்கிய நபர்கள்.
உயிரிழந்த அனைவர் குறித்தும்,பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் குறித்து நான் சிந்திக்கின்றேன் கவலையடைந்துள்ளேன் என தெரிவிக்கும் அவர் உயிரிழந்த சிலருக்கு சிறிய பிள்ளைகள் இருந்தனர் என்கின்றார்.
இதனை பற்றி பேசும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லைஎன அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
சகையிங் மற்றும்மியன்மாரின் இரண்டாவது நகரமான மண்டலாயில் பூகம்பம் காரணமாக 2700 பேர் உயிரிழந்துள்ளனர் .இடிபாடுகளிற்குள் இருந்து உடல்களை மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் மீட்டு வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
சகையிங் புராதன பௌத்த ஆலயங்களிற்கு பெயர் பெற்றது அதேவேளை இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லீம்கள் வசிக்கின்றனர்.
மசூதிகள் அமைந்துள்ள மையோமா வீதியே நகரின் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி என அழிவுகளை நேரில் பார்த்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்தனர்.
இந்த வீதியின் பல வீடுகள் முற்றாக இடிந்துவிழுந்துள்ளன.
நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்,வீடுகள் இல்லாததாலும்,தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுவதால் அச்சத்தினாலும் அவர்கள் தொடர்ந்தும் வீதிகளில் காணப்படுகின்றனர்.
உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயோமாவில் மாத்திரம் 60 பேர் இடிபாடுகளிற்குள் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.மியாடோவ் மற்றும் மொய்கியா மசூதிகளில் இன்னும் பலர் உயிரிழந்தனர்,செவ்வாய்கிழமை இடிபாடுகளிற்குள் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்ப முயன்றனர் என்பதற்கான அறிகுறிகளை காணமுடிகின்றது என தெரிவிக்கும் சூ நாய் ஓ தனது சமூகத்தை சேர்ந்த உயிர் பிழைத்தவர்கள் இதனை தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது தாய்லாந்தின் நகரமொன்றில் வசிக்கின்றார்,2021 சதிப்புரட்சியின் பின்னர் தனது குடும்பத்தவர்களுடன் அவர் மியன்மாரிலிருந்து தப்பிவெளியேறினார்.
மசூதியின் பிரதான தொழுகை அறைக்கு வெளியே தொழுகையில் ஈடுபடுபவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்ளும் பகுதியில்உடல்கள் காணப்பட்டன,சிலர் மற்றையவர்களின் கரங்களை பிடித்தவாறு உயிரிழந்திருந்தனர்,இடிந்துநொருங்கும் கட்டிடங்களில் இருந்து ஏனையவர்களை காப்பாற்ற முயன்றவேளை அவர்கள் உயிரிழந்திருக்கலாம் போல தோன்றுகின்றது.