மரீன் லு பென் வழக்கு : நீதிபதிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு!!

2 சித்திரை 2025 புதன் 17:31 | பார்வைகள் : 2497
மரீன் லு பென் வழக்கில் கலந்துகொண்ட நீதிபதிகளின் வீடுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர் மரீன் லு பென்னுக்கு தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டது கடந்த இரண்டு நாட்களாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நீதிபதிகள் மீது பெரும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டு வருகின்றன. ”தகுதியற்ற நீதித்துறை குழு” - “நீதிபதிபதிகளின் கொடுங்கோல் முறை” - “நீதித்துறையின் சதி” போன்ற பல்வேறு கருத்துக்கள் சமூகவலைத்தளம் முழுவதும் நிரம்பி வழிகிறது. லு பென்னின் ஆதரவாளர்கள் பலர் நீதிபதிகளை அச்சுறுத்தியும், அவதூறு பரப்பியும் வருகின்றனர்.
இந்நிலையில், பரிசில் உள்ள நீதிபதிகளின் வீடுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்ட்டுள்ளது எனவும், அவர்களது சுற்றுப்பகுதி சிறப்பு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ”நீதித்துறை தனித்து இயங்குகிறது. நீதிபதிகள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள்” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.