Paristamil Navigation Paristamil advert login

மாற்றம்பெறும் Navigo Liberté + !!

மாற்றம்பெறும் Navigo Liberté + !!

2 சித்திரை 2025 புதன் 18:00 | பார்வைகள் : 5203


நவிகோவின் Liberté + பயண அட்டைகள் முற்று முழுதாக ‘டிஜிட்டல்’ வடிவில் மாற்றம்பெற உள்ளதாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் தலைவர் Valérie Pécresse இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Liberté + அட்டைகளை தொலைபேசி வழியாகவே பெற்றுக்கொண்டு, அதன் வழியாகவே அதனைப் பயன்படுத்த முடியும் எனவும், நெகிழியில் (ப்ளாஸ்டிக்) அச்சிடப்பட்ட அட்டை ஒன்றை கொண்டுசெல்ல வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Liberté + இனை ஒரு மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 2025 ஜூன் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்