Sevron : ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்.. சாரதி பலி.. போக்குவரத்து தடை!!

2 சித்திரை 2025 புதன் 18:29 | பார்வைகள் : 1500
இன்று ஏப்ரல் 2, புதன்கிழமை Sevron (Seine-et-Marne) நகரில் ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளன.
N104 தேசிய சாலையில் பிற்பகல 1.15 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Sevron மற்றும் Brie-Comte-Robert நகரங்களை இணைக்கும் வீதியில் பயணித்த கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
இதில் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். ஏனைய இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்தை அடுத்து இரு பக்க போக்குவரத்துக்களும் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.