மியான்மார் நிலநடுக்கம்…! தொடர்ந்து சடுதியாக அதிகரித்த பலி எண்ணிக்கை

3 சித்திரை 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 544
மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.