la crècheசில் வாழைப்பழத்தால் மூச்சுத் திணறி இறந்த 20 மாத குழந்தை.

3 சித்திரை 2025 வியாழன் 14:28 | பார்வைகள் : 2057
மார்ச் 21 வெள்ளிக்கிழமையன்று Plessis-Robinson (Hauts-de-Seine) இல் Bryann என்கிற 20 மாத குழந்தை கிறஸ்சில் வாழைப்பழத்தை விழுங்கியதால் சுமார் 25 நிமிடங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து குழந்தை Kremlin-Bicêtre (Val-de-Marne) மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. மேலும் சுயநினைவின்றி இருந்த குழந்தை கோமா நிலைக்கு தள்ளப்பட்டது. வைத்திய பரிசோதனையில் மூளை வீக்கம் இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து மார்ச் 28 அன்று குழந்தை இறந்தது.
பிரையனின் தந்தை ஒரு வாழைப்பழத்தால் ? "இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு புரியவில்லை" என்றும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்.மேலும் இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க"இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். குழந்தையின் மரணம் குறித்து பிரையனின் தந்தை புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் இல்லாத நிலையில், குழந்தையின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தபடவில்லை.