ஏப்ரலில் ஒரு கோடை... வருகிறது கடும் வெப்பம்!!

3 சித்திரை 2025 வியாழன் 14:35 | பார்வைகள் : 2546
இந்த வார இறுதியில் தலைநகர் பரிசை கடுமையான வெப்பம் தாக்கும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
பிரான்சில் ஜூன் ஜூலை மாதங்களில் நிலவும் வெப்பம் போன்று இந்த ஏப்ரல் 4 - 5 ஆம் திகதிகளில் வெப்பம் தாக்க உள்ளது. நாளை ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை 23°C வரை வெப்பம் நிலவும் எனவும், மறுநாள் சனிக்கிழமை 25°C வரை வெப்பம் நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த வெப்பம் தொடர்பில் Meteo France தெரிவிக்கையில், “ஜூன் மாத வெப்பம் ஏப்ரல் மாதத்தில்” நிலவுகிறது என தெரிவித்துள்ளது. பிரான்சில் கோடைகாலம் ஆரம்பமாகும் போது தெற்கு நகரமான Marseille போன்ற நகரங்களிலியே முதலில் அதிக வெப்பம் நிலவும், அதன் பின்னரே பரிசுக்கு வெப்பம் அதிகரிக்க தொடங்கும். ஆனால் இந்த வார இறுதியில் மார்செய் நகரத்தை விடவும் பரிசில் அதிக வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.