இரவு நேரத்தில் மூடப்படும் A6 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி!!

3 சித்திரை 2025 வியாழன் 18:19 | பார்வைகள் : 1324
A6 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இரவு நேரத்தில் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Franconville தொடக்கம் Herblay-sur-Seine நகரம் வரையான 20 கிலோமீற்றர் தூரம் வீதி மூடப்பட உள்ளது. Montigny-lès-Cormeilles (Val-d'Oise) நகரில் உள்ள பாதசாரி மேம்பாலம் ஒன்று சிதைவடைந்துள்ளதால், அதனை திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதை அடுத்து ஏப்ரல் 7, திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் 8 இரவுகள் குறித்த பகுதி மூடப்பட உள்ளது. இடையில் 12 - 13 ஆம் திகதிகளான வார இறுதி நாட்களில் இந்த தடை இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரவு 9.30 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை இந்த சாலை மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 7 முதல் 10 ஆம் திகதி வரையும், பின்னர் 14 தொடக்கம் 17 ஆம் திகதிவரையும் இந்த பகுதி தடைப்படும்.