Paristamil Navigation Paristamil advert login

Gifi நிறுவனம் தனது 11 கடைகளை மூடுவதாக அறிவிப்பு! 300 பேர் வேலை இழக்கும் அபாயம்!!

Gifi நிறுவனம் தனது 11 கடைகளை மூடுவதாக அறிவிப்பு! 300 பேர் வேலை இழக்கும் அபாயம்!!

4 சித்திரை 2025 வெள்ளி 09:35 | பார்வைகள் : 2292


Gifi நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நஷ்டத்தை சந்தித்துள்ளது. Action , Maxibazar ஸ்டோர்கள் மற்றும் சீன தளமான Temu போன்ற இணைய தளங்களின் போட்டியுடன், Gifi இன் செயல்பாடுகள்  2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றத்தால் சேதமடைந்தது. வியாழன் ஏப்ரல் 3 ஆம் திகதி ஒரு வேலைப் பாதுகாப்புத் திட்டத்தின் (plan de sauvegarde de l'emploi) விளைவாக சுமார் 300 பேர் வேலை இழக்க நேரிடும் அல்லது Gifi இன் மொத்த பணியாளர்களில் 5% பேர் பணி நீக்கப்படுவார்கள் என்று Gifi நிறுவனம் அறிவித்துள்ளது. பிரான்சில் சுமார் 6,000 பேர் பணிபுரியும் 570 Gifi கடைகளில் பின்வரும் 11 கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.

Lyon, Thiais (Val-de-Marne), Stains (Seine-Saint-Denis), Pontault-Combault (Seine-et-Marne), Toulouse, Neuville-en-Ferrain (Nord), Saint-Claude (Jura), Saverne (Bas-Rhin), La Ferté Macé (Orne), Tonnerre (Yonne) et Besançon.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்