Paristamil Navigation Paristamil advert login

மரீன் லு பென்னுக்கு எதிரான தண்டனை.. Rassemblement national கட்சியில் இணைந்த 20,000 பேர்!!

மரீன் லு பென்னுக்கு எதிரான தண்டனை.. Rassemblement national கட்சியில் இணைந்த 20,000 பேர்!!

4 சித்திரை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1683


மரீன் லு பென் மீது தகுதியின்மை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிதியை கட்சி பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியதாக அவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகும். இந்நிலையில், அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதன் பின்னர் அவரது Rassemblement national கட்சியில் இணையும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

முதல் இரண்டு நாட்களில் 10,000 பேர் கட்சியில் இணைந்துள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 20,000 ஆக உயர்வடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை நேற்று மாலை கட்சித்தலைவர் Jordan Bardella தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 100,000 பேர் கட்சியில் இணைந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மேலும் பல ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளமை கட்சியை வலுப்படுத்துவதாகவும், ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மரீன் லு பென்னுக்கு ஆதரவாக கட்சி ஆதரவு கையெழுத்துக்களை பெற்று வருகிறது. அதில் இதுவரை 500,000 பேர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்