Paristamil Navigation Paristamil advert login

யாழில் விபத்தில் தாதி உயிரிழப்பு

யாழில் விபத்தில் தாதி உயிரிழப்பு

4 சித்திரை 2025 வெள்ளி 05:23 | பார்வைகள் : 552


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை விளான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.   

விபத்தில் படுகாயமடைந்த தாதிய உத்தியோகஸ்தரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கு சிகிச்சை பெற்று வந்தார் 

அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்