Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினர் மீது நாயை ஏவிவிட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள்.. - துப்பாக்கிச்சூடு!!

காவல்துறையினர் மீது நாயை ஏவிவிட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள்.. - துப்பாக்கிச்சூடு!!

4 சித்திரை 2025 வெள்ளி 10:00 | பார்வைகள் : 1111


போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் காவல்துறையினர் மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்துள்ளனர்.

Pierrefitte-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று முன் தினம் ஏப்ரல் 2, புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. Rue Gueroux வீதியில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பிற்பகல் 3 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  அங்கு இரு நபர்கள் Belgian Malinois நாய் ஒன்றை வைத்திருந்துள்ளனர்.

காவல்துறையினர் அவர்களை நெருங்க, உடனடியாக நாயை அவர்கள் மீது ஏவிவிட்டுள்ளனர். நாய் அவர்களை கடிக்க முற்பட, அதன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். மொத்தமாக எட்டு தடவைகள் சுடப்பட்டு நாய் கொல்லப்பட்டது.

போதைப்பொருள் விற்பனையாளர்களில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாமவர் தப்பி ஓடிய நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்