காலிஃப்ளவர் ஃப்ரை

7 பங்குனி 2025 வெள்ளி 10:39 | பார்வைகள் : 229
காலிஃப்ளவர் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி உண்கின்றனர். காலிஃப்ளவர் குழம்பாக செய்தாலும் சரி, காலிஃப்ளவர் கிரேவியாக செய்தாலும் சரி, ப்ரையாக செய்தாலும் சரி இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். மாலை நேர ஸ்நாக்ஸ்லும் காலிஃப்ளவர் ப்ரை முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்தகைய விருப்பமான உணவு பொருளான காலிஃப்ளவரை ஒருமுறை இப்படி ஃபிரை செய்து பாருங்க. சுவை அசத்தலாக இருக்கும்.
காலிஃப்ளவர் ஃப்ரை செய்யத் தேவையானவை:
காலிஃப்ளவர் - 1
கடலை மாவு - 2 கைப்பிடி
மைதா மாவு - 2 கைப்பிடி
இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மைதா மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும். இதில் வேக வைத்த காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்து நன்றாகப் பிரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இந்த காலிஃப்ளவர் ஃப்ரை அனைத்து வகையான சாத வகைகள் மற்றும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும