Paristamil Navigation Paristamil advert login

நூற்றாண்டைத் தொடும் Sacré-Cœur தேவாலயம்! - சில தகவல்கள்!!

நூற்றாண்டைத் தொடும் Sacré-Cœur தேவாலயம்! - சில தகவல்கள்!!

15 ஆனி 2017 வியாழன் 17:30 | பார்வைகள் : 18486


' வெண் தேவாலயம்' 'வைட் சேர்ச்' என நாம் அழைக்கும் இந்த தேவாலயம் குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இன்னும் இரண்டாண்டுகளில் தேவாலயம் நூற்றாண்டு கொண்டாடுகிறது. பார்க்கலாம்.. Sacré-Cœur தேவாலயம் குறித்து சில தகவல்கள்!! 
 
பிரெஞ்சு கட்டட வடிவமைப்பாளர் Paul Abadie இன் எண்ணப்படி உருவானது இந்த தேவாலயம். 1875 ஆம் ஆண்டு தேவாலயத்தின் கட்டிடப்பணி ஆரம்பித்தது. பல்வேறு  பிரச்சனைகளை தாண்டி 1914 ஆம் ஆண்டு ஒருவழியாக கட்டிட வேலைகள் அனைத்தும் முடிவுற்றது.  இத்தனை வருடங்களா என ஆச்சரியமா? உண்மைதான்!!
 
மொத்தம் 77 கட்டிடக்கலைஞர்கள் கடும் போட்டி போட்டு, அதில் Paul Abadie இன் 'வடிவமைப்பு' வெற்றி பெற.. அவருக்கே இத்தேவாலயத்தை கட்ட, 1875 ஆம் ஆண்டு வாய்பு கிடைத்தது. வேலைகளும் கடுகதியில் நடந்தன.
 
சோகம் என்னவென்றால், 1875 ஆம் ஆண்டு கட்டிட பணிகள் ஆரம்பித்ததல்லவா... 1884 ஆம் ஆண்டு Paul Abadie எதிர்பாராவிதமாக இறந்துவிடுகிறார். அதன் பின்னர், தேவாலயத்தின் பணிகள் அப்படியே கிடக்க, அதன் பின்னர் நான்கு கட்டிடக்கலைஞர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தேவாலயத்தை கட்டிக்கொண்டு, வேலையை முடிக்கலாம் என்றால்,...
 
1914 ஆம் ஆண்டு வேலை மீண்டு தடைப்பட்டது. நீங்கள் யூகித்தது சரிதான். முதலாம் உலகமகா யுத்தம்!! தேவாலயம் கட்ட ஆரம்பித்த நேரம் சரியில்லையோ... இத்தனை தடங்கல்கள் இடம்பெறுகிறதே என எல்லோருக்கும் குழப்பம். 
 
1914 ஆம் ஆண்டு, தேவாலயம் உண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் 'தட்டு முட்டு' வேலைகள் மீதம் இருந்தன. அதற்குள் பரிசில் யுத்தம் இடம்பெற்று... பரிசை விட்டு வெளியேறி.. ஒருவழியாக.. 1919 ஆம் ஆண்டு மீண்டும் அவசர அவசரமாக வேலைகள் முடிக்கப்பட்டு, தேவாலயம் திறக்கப்பட்டது!! 
 
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக கட்டிடப்பணிகளுக்கு எடுத்துக்கொண்டாலும்.. இன்றும் முக்கிய தேவாலயங்களுக்குள் ஒன்றாக இது திகழ்கிறது. வரும் 2019 ஆம் ஆண்டுடன் இது நூற்றாண்டை தொடுகிறது!! 
 
35 Rue du Chevalier de la Barre, 75018 Paris எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த தேவாலயம் இரவு 10.30 மணிவரை திறந்திருக்கும்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்