Paristamil Navigation Paristamil advert login

பந்து வீச்சு விதியில் மாற்றம்? ஷமியின் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவு

பந்து வீச்சு விதியில் மாற்றம்? ஷமியின் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவு

8 பங்குனி 2025 சனி 10:27 | பார்வைகள் : 139


பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய ஷமிக்கு ஆதரவு வலுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், பந்து வீச்சாளர்கள் உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக மாற்றுவதாக ஐசிசி தடை விதித்தது.

பந்து தேய்ந்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் அதன் ஒரு பக்கத்தில் உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக மாற்றுவார்கள். இதன் மூலம் பந்து வீச்சாளர்கள் reverse swing செய்ய முடியும்.  

இந்நிலையில் இந்தியாவின் பந்து வீச்சாளரான முகமது ஷமி, பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க ஐசிசிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஷமியின் இந்த கோரிக்கைக்கு நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ஆதரவு தெரிவித்துள்ளார். "ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் சாதாரணமாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்" என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.

"பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த தடையை நீக்குவது அவசியம்" என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டரும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில், உமிழ்நீர் மூலம் வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுப்பதற்காக ஐசிசி இந்த தடையை அமல்படுத்தியது. தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் அந்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்