Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதியின் மாத சம்பளம் எவ்வளவு?

ஜனாதிபதியின் மாத சம்பளம் எவ்வளவு?

14 ஆனி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 18781


ஜனாதிபதியாக இருப்பது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் இல்லை. எவ்வளவு சிக்கல்களை சமாளிக்கவேண்டும். இதோ புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை பாருங்கள்... பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று ஜூன் 14 உடன் ஒரு மாதம் ஆகிறது. நிற்பதற்கு நேரமில்லாமல் தொடர்ச்சியான வேலைப் பழு. இப்படி உழைப்பதற்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்??!! 
 
மக்ரோன் என்றில்லை, ஜனாதிபதியாக யார் இருந்தாலும் அவருக்கென ஒவ்வொரு மாதமும் சம்பளம் ஒவ்வொரு காலகட்டத்திலும் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒரே அளவு சம்பளம் தான் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்படுகிறது. ஏனைய அரசியல்வாதிகளை விடவும் 50 வீத அதிக சம்பளம் இருவருக்கும் வழங்கபடுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டின் சம்பள அளவீடு படி, ஜனாதிபதிக்கு மாத சம்பளமாக 20,963 யூரோக்கள் வழங்கப்பட்டது. அதன் பின்னர், 2009 ஜூலை மாதத்தோடு இந்த அளவீட்டில் மாற்றம் ஏற்பட்டு, 21,131 யூரோக்கள் வழங்கப்படுகின்றன. நம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு முதல் மாத சம்பளமாக 21,131 யூரோக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பதவி ஏற்று ஒரு மாத காலம் ஆன நிலையில், தன் கடமையை மிக சரியாகவும், உறுதியாகவும் மேற்கொண்டு வரும் ஜனாதிபதிக்கும் நம் வாழ்த்துக்கள்! சம்பளம் வாங்கினால் 'ட்ரீட்' வைக்கனுமாமே..??!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்