Paristamil Navigation Paristamil advert login

இயற்கை எழில் கொஞ்சும் Jura மலைத்தொடர்கள்!!

இயற்கை எழில் கொஞ்சும் Jura மலைத்தொடர்கள்!!

13 ஆனி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18895


சுத்தமான காற்று... அழகான பச்சைப் பசேல் மரங்கள்.. வழி நெடுகிலும் ஏரிகள்.. சுவிட்சர்லாந்தின் எல்லையை தொட்டுக்கொண்டு அழகில் ஆர்ப்பரிக்கிறது Jura மலைத் தொடர். 
 
உண்மையில் Jura ஒரு மாவட்டம். பிரான்சில் எங்கு ஏரிகள் அதிகம் என்றால்.. அது இந்த மாவட்டத்தில் தான். Bourgogne-Franche-Comté மாகாணத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றுதான் இந்த Jura. பிரான்சின் 39வது மாவட்டம். 
 
1790 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது இருந்த 83 மாவட்டகளில் ஒன்றாக இது இருந்தது. அப்போது தான் இது ஒரு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 
 
Jura மாவட்டத்தின் மிக குறைந்த உயரம் 200 m (700 ft) ஆகவும், அதிகூடிய உயரம் 1,200 m (3,900 ft) ஆகவும் உள்ளது. மொத்தம் 4,999 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது இந்த மாவட்டம். 
 
Jura மாவட்டம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது இங்குள்ள ஏரிகள் தான். குறிப்பாக Lac de Chalain ஏரி. ஒரு கிலோமீட்டர் அகலம், மூன்று கிலோமீட்டர்கள் நீளம்.. என்றால் நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்! தவிர மிக நீளமான Lac de Vouglans ஏரியின் ஒரு பகுதி இந்த மாவட்டத்துக்குள் நுழைந்து செல்கிறது. 
 
இவை தவிர, மேலும் 21 ஏரிகள் பெயர் குறிப்பிடப்படும் படியான மிகப்பெரும் ஏரிகளாக உங்கு உள்ளது. இந்த மலை மாவட்டம், ஆல்ப்ஸ் மலை போன்று இல்லாமல் மரங்களாலும், புற்கள், ஏரிகள் என பச்சை பசேல் என்ற இடங்களாக இருப்பது அழகை கூட்டுகிறது.  
 
சுற்றுலாப்பயணிகளுக்கு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது இந்த Jura மாவட்டம். அதன் ஏரிகளும் தான். இயற்கையோடு உங்கள் விடுமுறையை கழிக்க ஒருதடவை 'விஸிட்' அடிகலாமே??!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்