Paristamil Navigation Paristamil advert login

சாதனை படைத்த பரிஸ் மெற்றோ சேவை!!

சாதனை படைத்த பரிஸ் மெற்றோ சேவை!!

9 ஆனி 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18895


மெற்றோ சேவைகளின் அவசியம் நீங்கள் அறிந்தது தான். பிரான்சின் மெற்றோ சேவைகள் ஆரம்பித்தது 116 ஆண்டுகளுக்கு முன்னர். ஐரோப்பாவின் இரண்டாவது 'பிஸி'யான மெற்றோ சேவைகள் இந்த பிரெஞ்சு மெற்றோக்கள். 
 
இரஷ்யாவின் Moscow மெற்றோ சேவைகள் முதல் இடத்தில் இருக்க, இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த பிரெஞ்சு மெற்றோக்கள் ஒரு நாளுக்கு 4.16 மில்லியன் பயணிகளை 'ஏற்றி இறக்குகிறது'. 
 
86.9 சதுர கிலோமீட்டர்களுக்கு இயங்கும் மிக அடர்த்தியான மெற்றோ சேவை இது. மேலும் இந்த 86.9 சதுர கிலோ மீட்டர்களுக்குள் 245 நிலையங்களை கொண்டுள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டில்  ITDP நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் 'உலகின் சிறந்த போக்குவரத்து சேவைகள்' பட்டியலில் பிரெஞ்சு மெற்றோ சேவை முதல் இடத்தை சொல்லி அடித்தது! பெருமைமிகு விடையமாக அது பார்க்கப்பட்டது. தவிர, பரிசில் இருக்கும் 100 வீத மக்களுக்கும் இலகுவாக அடையக்கூடியவகையில் இந்த சேவைகள் இருப்பதாலேயே இது 'முதல்' இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 
 
ஓகே, நமது மெற்றோ கடந்த 2015 ஆம் ஒரு சாதனை படைத்தது. குறித்த அந்த வருடத்தில் 1.520 பில்லியன் பயணிகளை சுமந்திருந்தது. சேவைகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை, ஒரே வருடத்தில் அதிக பயணிகளை அந்த வருடத்தில் சுமந்திருந்தது. 
 
19 ஆம் திகதி, ஜூலை 1900 ஆம் ஆண்டு சேவைகள் ஆரம்பித்து, இன்று பரிஸ் தாண்டி.. இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது மெற்றோ.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்