மக்கள் தொகை அதிகம் கொண்ட பிரெஞ்சு மாவட்டம் எது??
8 ஆனி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 18844
மேற்கண்ட கேள்விக்கு பல தரப்பிலும் பதில்களை தேடினோம். அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.. கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் முடிவுகள் எல பலவற்றை ஆராய்ந்ததில், பரிசுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
பிரான்சின் 101 மாவட்டங்களில்... தலைநகர் பரிஸ் தானே மிக நெருக்கடியான நகரம்.. இங்குதானே ஒரு வாகன 'தரிப்பிடத்துக்கு' அலையோ அலை என அலைகிறோம்.. என்றால் இங்குதானே மக்கள் தொகை அதிகம் இருக்கவேண்டும்?? இல்லை. பரிசில் சுற்றுலாத்தலம்.. கட்டிடங்கள்.. ஏகபோகமான அலுவலகங்கள்.. வங்கிகள், வணிக வளாகங்கள் நிரம்பி வழிகிறதே.. பிறகு எங்கே மக்கள் வசிக்க இடம் இருக்கிறது? ஓகே.. பீடிகை போதும் என்பதால்.. அதை சொல்லிவிடுகிறோம். பிரான்சின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் Nord!!
1939 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, 28,91,020 (கிட்டத்தட்ட இருபத்தொன்பது இலட்சம்) மக்கள் தொகையுடன் முன்னணியில் இருந்தது பரிஸ்! பின்னர் 1999, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புக்களில் எப்போதும் Nord மாவட்டமே முன்னிலையில் உள்ளது.
Nord மாவட்டம் Hauts-de-France மாகாணத்தில் உள்ள, பிரான்சின் 59 ஆவது மாவட்டம்! 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2,595,536 மக்கள் இங்கு வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5,743 மக்கள் படி, மிக நெருக்கமான மக்கள் தொகையை கொண்டுள்ளது.
பல சுற்றுலாத்தலங்கள், வணிக வளாகங்கள் என எப்போதும் சுற்றுலா பயணிகளை கவரத்தவறுவதில்லை NORD!!