Paristamil Navigation Paristamil advert login

பாரம்பரியம் மிக்க பிரெஞ்சு கஃபே!! Fouquet's குறித்த சில தகவல்கள்!!

பாரம்பரியம் மிக்க பிரெஞ்சு கஃபே!! Fouquet's குறித்த சில தகவல்கள்!!

6 ஆனி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18132


உலகின் அழகான சாலை என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ் எலிசேயின் ஒரு பகுதியையும், George V சாலையின் ஒரு பகுதியையும் இணைத்துக்கொண்டு.. சிவப்பு நிற தொப்பி அணிந்து இருக்கும் இந்த கஃபே உங்களுக்கு பரீட்சயமானதுதான்!!
 
பிரான்சின் மிக பாரம்பரியமான உணவகம் இது. பிரெஞ்சு உணவு என்பது எத்தனை பிரபலமோ.. அந்த உணவின் உண்மையான சுவையை இம்மியளவும் குறையாமல் பிரெஞ்சு மக்களுக்கும் அளவு கணக்கற்ற வெளிநாட்டவருக்கும்  தந்துகொண்டிருக்கிறார்கள் Fouquet உணவகத்தினர். 
 
118 ஆண்டுகளுக்கு முன்னர், Louis Fouquet என்பவர் 1899 ஆம் ஆண்டு இந்த உணவகத்தை ஆரம்பித்தார். அன்றில் இருந்து இன்றுவரை எப்போதும் சுவை மாறாத பிரெஞ்சு உணவை இங்கு ருசிக்கலாம்!!
 
பிரான்சின் மிக பிரபலமான சமையல் எக்ஸ்பேர்ட் Pierre Gagnaire கண்டுபிடித்த, பல பிரபலமான உணவுகள்  இங்கே கிடைக்கும். வருடத்தில் ஒருமுறை இடம்பெறும் César சினிமா விருது விழாவுக்கு இங்கிருந்தே உணவு செல்கிறது. 
 
2007 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் போது நிக்கோலா சர்கோசி அபார வெற்றி பெற.. அவரின் வெற்றி விழாவை Fouquet உணவகத்தில் கொண்டாடினார். இரவு 11.30 மணிவரை திறந்திருக்கும் இந்த உணவகத்தில் தான் சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டவர்கள் குவிகிறார்கள். 
 
விஷயம் என்னவென்றால்... இந்த பாரம்பரியம் மிக்க உணவத்தில் தான், பரிசில் அதிக விலை கொண்ட கஃபே விற்கப்படுகிறது. அந்த கஃபே குறித்து நாளை பார்க்கலாம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்