பிக்காசோவின் Dove with green peace! - ஓவியத்தின் விலை 25 மில்லியன் யூரோ!!
5 ஆனி 2017 திங்கள் 11:30 | பார்வைகள் : 19494
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் கொள்ளையன் ஒருவன் பரிஸ் Art Museum இல் இருந்து ஐந்து ஓவியங்களை திருடிச்சென்றான் என்ற சம்பவத்தை குறிப்பிட்டிருந்தோம் இல்லையா... அந்த ஐந்து ஓவியங்களில் ஒன்று தான் Dove with green peace எனும் ஓவியம்! அதன் மதிப்பு 25 மில்லியன் யூரோக்கள்!!
ஓவியர் Pablo Picasso பற்றி சொல்லவே தேவையில்லை... ஸ்பானிய நாட்டு குடியுரிமை கொண்டவர் என்றாலும்... அவர் வாழ்நாளில் அதிகமாக கழித்தது பிரான்சில் தான். நாடக மேடைகளில், கவிஞர், மேடை அலங்கரிப்பு, வசனகர்த்தா என பல துறை கலைஞர்... இப்படி பல கலைகளில் ஒன்றுதான் ஓவியம். அதுவும் நவீன ஓவியங்களில்.. ஒரு தனி பரிமாணம் கொண்டுவந்தார்.
இப்படியாக ஓவியத்துறையில் ஈடுபட்டு வரும் போது, 19 ஆம் நூற்றாண்டின் பொக்கிஷமான அந்த ஓவியத்தை 1907 ஆம் ஆண்டு வரைகிறார். அதன் பெயர் Le pigeon aux petit pois.
எல்லா நவீன ஓவியங்களும் போல இதுவும் 'இதெல்லாம் ஒரு ஓவியமா?' என ஒதுக்கிவிட்டனர். ஆனால் பின்னர் அது பாதுகாக்கப்பட்டு, நூற்றாண்டுகள் கடந்து பரிஸ் Art Museum இல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அப்போது தான், அந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றது. 2010 இல் இதன் மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள். என்ன தலை சுற்றுகிறதா?? இதென்ன பிரம்மாதம்... ஓவியரின் முழு பெயரை கேட்டால்.. நேரே மயக்கம் தான்!!
ஓவியரின் முழு பெயர் Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso. சுருக்கமாக பிக்காசோ!!