Paristamil Navigation Paristamil advert login

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் ?

11 பங்குனி 2025 செவ்வாய் 11:11 | பார்வைகள் : 285


தமிழ் சினிமாவின் டாப் நடிகரான ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்கத்தான் விரும்புகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி, காலா', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பேட்ட', நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்', ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி', மீண்டும் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்து 'பேட்ட' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் உடன் மீண்டும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. இப்பத்திற்காக ரஜினிகாந்த்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட் உடன் சேர்த்தால் 500 கோடி வரை செலவாகலாம் என்கிறார்கள்.

'ஜெயிலர் 2' படத்தை முடித்த பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பாராம் ரஜினிகாந்த். இது மட்டுமல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களும் ரஜினிகாந்தை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

2026ல் விஜய் தீவிர அரசியலில் போய்விட்டால் தமிழ் சினிமாவின் ஒரே வசூல் நாயகன் ரஜினிகாந்த் மட்டுமே.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்