வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?
 
                    11 பங்குனி 2025 செவ்வாய் 11:27 | பார்வைகள் : 3475
நிறைய பேர் உடல் எடையை குறைக்க பல்வேறு முறைகளை முயற்சி செய்கிறார்கள். அதில் நடைப்பயிற்சியும் முக்கியமான ஒன்று. நடைப்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுப்படுத்த மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
 அதற்காக, வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வதா?  சாப்பிட்ட பிறகு செய்வதா? என்ற குழப்பம் பலருக்கு உள்ளது. நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் குறித்து கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. சிலர் காலியான வயிற்றில் நடப்பதை ஆதரிக்க, மற்றவர்கள் உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதை பரிந்துரைக்கின்றனர். இவ்விரு முறைகளின் பலன்கள் மற்றும் ஏற்றதகுந்த சூழல்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
 
காலியான வயிற்றில் நடைப்பயிற்சி அதாவது காலை உணவுக்கு முன், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் தேக்கமுள்ள கொழுப்பை எரிக்க உதவும். இது வளர்சிதை மாற்றத்தையும்  மேம்படுத்தி, உடல் எடை குறைப்பு பயணத்தை துரிதப்படுத்தும். மேலும், மன தெளிவையும் அதிகரித்து, நாளை உற்சாகமாக தொடங்க வழிவகுக்கும்.
 
உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி என்பது அதாவது சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதனால் செரிமானம் மேம்படும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும், உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும். மேலும், இது கலோரிகளை எரிக்கவும் உதவுவதால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம்.
 
இவ்விரு முறைகளும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன. அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்புவோர் காலியான வயிற்றில் நடைப்பயிற்சி செய்யலாம். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், உங்கள் உடல்நிலை, பழக்கவழக்கம், உணவுமுறை ஆகியவற்றைப் பொருத்து, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது சிறந்தது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan