Paristamil Navigation Paristamil advert login

Leclerc - 5000 வேலைவாய்ப்பு!!

Leclerc - 5000 வேலைவாய்ப்பு!!

11 பங்குனி 2025 செவ்வாய் 21:35 | பார்வைகள் : 1976


எதிர்வரும் சனிக்கிழமை 15ம் திகதி, பெரும் பல்பொருள் அங்காடி வலையமைப்பான Leclerc ஒரு மாபெரும் சந்திப்பை  («La grande rencontre») தேசிய அளவில் செய்ய உள்ளது. இது ஒரு வேலை வாய்ப்புச் சந்திப்பாகும்.

தொடர்ச்சியாக 4வது வருடமாக Leclerc இந்த வேலைவாய்ப்புச் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றது.
 
எதிர்வரும் சனிக்கிழமை 15ம் திகதி இந்த வேலைவாய்ப்புச் சந்திப்பில் தேசிய அளவில் 5000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

வேலைவாய்ப்புத் தேடுவோர் அவர்களிற்கு அருகாமையில் உள்ள  Leclerc இல் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்.

கடந்த வருடம் இந்தச் சந்திப்பில் 55.000 பேர் கலந்து கொண்டுள்ளனர்

எதிர்வரும் சனிக்கிழமை, உங்கள் கல்வித்தகமைகள், தொழில் அனுபவங்கள் அடங்கிய சுயவிபரக் கோவையான CV தயாரித்துச் செல்லவேண்டும் எனவும் இந்தப் பெரும் பல்பொருள் அங்காடி வலையமைப்புத் தெரிவித்துள்ளது.

சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்