30 நாட்கள் போர் நிறுத்தம்.. யுக்ரேன் ஒப்பந்தம்.. வரவேற்ற ஜனாதிபதி மக்ரோன்!

12 பங்குனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1510
ரஷ்யா-யுக்ரேன் நாடுகளுக்கிடையே 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தினை யுக்ரேன் ஏற்றுக்கொண்டுள்ளது.அதை அடுத்து யுக்ரேன் மீது அமெரிக்கா விதித்த தடைகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.
நேற்று, செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவில் வைத்து அமெரிக்க தலைவர்கள் மற்றும் யுரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் போது அமெரிக்கா முன்மொழிந்த ‘30 நாட்கள் போர்நிறுத்த’ ஒப்பந்ததினை யுக்ரேன் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் ஜெட்ரா நகரில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. கிட்டத்தட்ட 8 மணிநேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.
மேலும், யுக்ரேன் மீது அமெரிக்கா விதித்த தடைகள் நீங்குவதாகவும் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.