பிரான்சின் முதலாவது மாவட்டம்! - சில தகவல்கள்!!
3 ஆனி 2017 சனி 10:30 | பார்வைகள் : 18572
பிரெஞ்சு தேசம் மொத்தம் 97 மாவட்டங்களை பிரதான நிலப்பரப்பிலும், 5 மாவட்டங்களை கடல் கடந்த நிலப்பரப்பிலும் கொண்டுள்ளது. தலைநகர் பரிஸ் 75 வது மாவட்டம்! அப்படியானால் முதலாவது மாவட்டம் எது?? Ain எனும் மூன்றெழுத்து மாவட்டம்!!
Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் மொதம் 12 மாவட்டங்கள். அதில் மாகாணத்தின் தலைநகர் லியோன் (Lyon) இந்த மாகாணத்தில் கிட்டத்தட்ட ஆறு இலட்சம் மக்களை கொண்ட ஒரு மாவட்டம் தான் Ain. மாவட்டம். பிரான்சின் முதலாவது மாவட்டமும் கூட !!
தோட்டம் துறவு, மாடு வளர்ப்பு, பண்ணை, விவசாயம், பால், வெண்ணை என பல இயற்கை உற்பத்திகளும் வேளாண்மைகளும் நிறைந்த நகரம் இது.
பிரான்சின் கிழக்கு எல்லையில் பாயும் Ain River நதியின் பெயரே, இந்த மாவட்டத்துக்கும் வைக்கப்பட்டது. தவிர Rhone நதியும் இங்கு பாய்கிறது. மொத்தம் நான்கு வட்டாரங்களை கொண்டுள்ளது இந்த மாவட்டம்!!
மிக நேர்த்தியான போக்குவரத்து சாலைகளும், வசதிகளும், அதிவேக TGV வசதிகளும் கொண்டது இந்த மாவட்டம். கூப்பிடு தூரத்தில் லியோன் விமான நிலையமும்.. மறு புறத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமானநிலையமும் உள்ளது.
1990களில் நான்கு இலட்சம் மக்கள் தொகையையும், தற்போது ஆறு இலட்சம் மக்கள் தொகையையும் கொண்டுள்ளது Ain.
தவிர, விவசாயம், இயற்கை வேளாண்மை தொழில்கள் நிறையும், தொழிற்சாலைகள், தனியார், அரச நிறுவனங்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் மாவட்டம் இதுவாகும். இங்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை வெறுமனே 5 வீதம் மட்டும் தான்!!
பிரான்சில் மிக தரமான பால் உற்பத்தி வகைகள் இந்த மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 5,170 பண்ணைகளும் இங்கு உள்ளன. இது 1970 களில் 15,000 க்கும் மேற்பட்டதாக இருந்தது.
தவிர, கைவினைப்பொருட்களின் வர்த்தகம், சுற்றுலாத்துறை வருவாய், தொழில் பேட்டைகள் என எப்போது செல்வம் கொழிக்கும் நகரமாக Ain திகழ்கிறது!!