ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களை முடக்க வேண்டும்.. பாராளுமன்றத்தில் தீர்மானம்!

13 பங்குனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1147
யுக்ரேனுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை நேற்று புதன்கிழமை பிரெஞ்சு பாராளுமன்றம் நிறைவேற்றியது.
பிரான்சில் உள்ள அனைத்து ரஷ்ய சொத்துக்களையும் முடக்குவதற்கான ஆதரவு வாக்குகள் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் 288 வாக்குகள் பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. தீர்மானத்துக்கு எதிராக 54 வாக்குகள் பதிவாகின. மரீன் லு பென்னின் Rassemblement national கட்சி இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
சொத்துக்களை முடக்கி, அவற்றை ரஷ்யாவினால் பாதிக்கப்பட்ட யுக்ரேனுக்கு வழங்குவதற்கான தீர்மானமே எட்டப்பட்டுள்ளது.
பிரான்சில் 210 பில்லியன் யூரோக்கள் ரஷ்ய சொத்துக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.