ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய 'வட சென்னை 2'!

13 பங்குனி 2025 வியாழன் 13:57 | பார்வைகள் : 145
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'வடசென்னை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால், ’வடசென்னை 2’ படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்றும், அதேபோல் வெற்றிமாறன் இயக்கவில்லை என்றும் கூறப்பட்டது. வெற்றிமாறன் உதவியாளர் ஒருவரின் இயக்கத்தில் உருவாகும் ’வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன் நடிப்பார் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போது ’வடசென்னை 2’ படத்தை வெற்றிமாறனே இயக்குகிறார் என்றும், தனுஷ் தான் இதில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், வெற்றிமாறன், தனுஷ், ஐசரி கணேஷ் ஆகிய மூவரும் சந்தித்து, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், தனுஷ் இல்லாமல் ’வடசென்னை 2’ படம் இல்லை என்றும் கூறப்படுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.